குவைத்தில் இருந்து ஒரு முக்கியச் செய்தி வெளியாகியுள்ளது – இன்று காலை “பல அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன” என்று குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானிகள்எந்தவிதக் காயமுமின்றி உயிர் தப்பினர்” என்றும் அவர்கள் மீட்கப்பட்டு உடல்நிலை பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. தற்போது வீரர்களின் நிலை “சீராக” உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த “சம்பவத்தின் சூழ்நிலைகள்” குறித்து தனது நட்பு நாடான அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் “விபத்துக்கான காரணங்கள்” குறித்து விசாரணைகளைத் தொடர்ந்து வருவதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது