ஈரான் மீதான தாக்குதல்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவினாலும், “தேவைப்பட்டால்” அமெரிக்க இராணுவ வீரர்களை (Ground troops) ஈரானுக்கு அனுப்பும் வாய்ப்பை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரிக்கவில்லை.
திங்களன்று நியூயார்க் போஸ்ட் (New York Post) அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது: “வீரர்களைத் தரையிறக்குவது (Boots on the ground) குறித்து எனக்கு எந்தப் பயமும் இல்லை. மற்ற ஜனாதிபதிகளைப் போல ‘வீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்’ என்று நான் சொல்ல மாட்டேன். பெரும்பாலும் அவர்கள் தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் தேவைப்பட்டால் நிச்சயம் அனுப்புவேன்.“
கருத்துக்கணிப்புகள் குறித்து ட்ரம்ப்:
கடந்த வார இறுதியில் வெளியான Reuters/Ipsos கருத்துக்கணிப்பில் 43% அமெரிக்கர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பதாகத் தெரிந்தாலும், ட்ரம்ப் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. “நான் சரியான காரியத்தைச் செய்ய வேண்டும். இது கருத்துக்கணிப்பு பற்றிய கேள்வி அல்ல.பைத்தியக்காரர்களால் நடத்தப்படும் ஒரு நாட்டிடம் (ஈரான்) அணு ஆயுதம் இருக்க அனுமதிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தான் நம்புவதாகவும், ஒரு “நிசப்தமான பெரும்பான்மை” (Silent majority) தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.