சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளது.
X தளத்தில் பகிரப்பட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலால் “கட்டிடத்தில் ஒரு சிறிய அளவிலான தீ விபத்தும், லேசான பொருள் சேதமும் ஏற்பட்டது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதரகம், ஜித்தா (Jeddah), ரியாத் (Riyadh) மற்றும் தஹ்ரான் (Dhahran) ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு (shelter in place) அறிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள எந்தவொரு இராணுவ நிலைகளுக்கும் அவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது