காலி இடர்பாட்டிற்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களின் போது தாக்கப்பட்டதா என்பது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தற்போதைய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரானிய கடற்படையின் ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் தாக்கப்பட்டதா என எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
முன்னதாக, சுமார் 180 பேருடன் பயணித்த ஈரானிய கடற்படைக் கப்பல், காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
கப்பலில் இருந்தவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.