ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவின் அழிவை ஒரு தனியான போராக பார்க்ககூடாது இது ஒரு ஆரம்பமே என என்று எச்சரித்துள்ளார்.

X (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரழிவின் அளவு, ஒரு பரந்த அதிகார முறையைப் பிரதிபலிக்கிறது என்று வாதிட்டார். அமெரிக்கா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றின் நட்பு நாடுகளால் உருவகப்படுத்தப்படும் “செல்வந்தர் ஆட்சி ஏகாதிபத்தியத்திற்கு” (Plutocratic imperialism) சவால் விடுபவர்களுக்கு எதிராக, இராணுவ வலிமை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான ஒரு மாதிரியாக (Model) இது அமைந்துள்ளதாக அவர் விவரித்துள்ளார்.
