அசர்பைஜானில் ஈரானிய ட்ரோன் (Drone) தாக்குதலால் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அசர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஒரு ட்ரோன் நக்கிவன் தன்னாட்சி குடியரசில் (Nakhchivan Autonomous Republic) உள்ள விமான நிலையத்தின் முனையக் கட்டிடத்தைத் தாக்கியது, மற்றொரு ட்ரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்திற்கு அருகில் விழுந்தது,” என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலில் விமான நிலையக் கட்டிடம் சேதமடைந்ததுடன், இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அசர்பைஜானுக்கான ஈரானிய தூதருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் “ஈரானிய தரப்பிற்கு தனது கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் மற்றும் அதற்கான எதிர்ப்பு கடிதம் சமர்ப்பிக்கப்படும்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் தொடங்கி ஐந்தாவது நாளாகும் நிலையில், தற்போது போர் அசர்பைஜான் எல்லை வரை பரவியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது