ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரான்ஸ் இராணுவவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து, பிரெஞ்சு ராணுவத்தில் நிகழ்ந்த முதல் மரணம் இதுவெனக் குறிப்பிட்ட மேக்ரான், உயிரிழந்த வீரர் அர்னால்ட் ஃபிரியோன் (Chief Warrant Officer Arnaud Frion) என அறிவித்துள்ளார்.
“அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக வீரர்களுக்கும், தேசத்தின் முழு அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மேக்ரான் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “எமது வீரர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் அவர்களுடனும் அவர்களது அன்புக்குரியவர்களுடனும் உறுதுணையாக நிற்கும்” என்றும் அவர் கூறினார்.
இப்பகுதியில் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடி வரும் பிரெஞ்சுப் படைகள் மீதான இந்தத் தாக்குதல்களை “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று மேக்ரான் கண்டித்துள்ளார்.
“ஈராக்கில் அவர்களின் இருப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாகும். ஈரானில் நடக்கும் போர் இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது,” என அவர் மேலும் வலியுறுத்தினார்.
READ MORE
வடக்கு ஈராக்கில் ட்ரோன் தாக்குதல்: 6 பிரெஞ்சு வீரர்கள் காயம்
