வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கு ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்காவின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இருந்த ஆறு படையினரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய கட்டளைப் பிரிவு (Central Command) அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விமான விபத்தானது எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலாலோ (Friendly fire) ஏற்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த படையினரின் விபரங்கள் அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு 24 மணிநேரம் கழித்தே பகிரங்கப்படுத்தப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
READ MORE
அமெரிக்க விமானத்தை சுட்டுவீழ்த்தினோம் – ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழு
