

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஹெஸ்புல்லா அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய அரசுடன் தொடர்புடைய தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டுத் தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் கடற்படை மற்றும் ட்ரோன் (drone) பிரிவுகள், தங்கள் நட்பு அமைப்பான லெபனானின் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாக ஈரானிய இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல் அவிவ் (Tel Aviv), மத்திய இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளில் வான்வழி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
