லெபனானில் உள்ள ஒரு சுகாதார மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வரும் வான்வழித் தாக்குதல்களில், மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் முன்களப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த மேலதிக விவரங்களை லெபனான் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்