அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில்விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ஆறு அமெரிக்க இராணுவத்தினரின் பெயர் விபரங்களை பென்டகன் வெளியிட்;டுள்ளது.
வியாழக்கிழமை மேற்கு ஈராக்கில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த ஆறு விமானப் படை வீரர்களின் அடையாளங்களை பென்டகன் சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.
உயிரிழந்தவர்கள்:
அலபாமாவின் ஆபர்ன் நகரைச் சேர்ந்த 33 வயது ஜோன் ஏ. கிளின்னர் (Maj. John A. Klinner).
வாஷிங்டனின் கோவிங்டன் நகரைச் சேர்ந்த 31 வயது கப்டன் அரியானா ஜி. சாவினோ (Capt. Ariana G. Savino).
கென்டக்கியின் பார்ட்ஸ்டவுன் நகரைச் சேர்ந்த 34 வயது சார்ஜென்ட் ஆஷ்லே பி. ப்ரூட் (Tech. Sgt. Ashley B. Pruitt).
இண்டியானாவின் மூர்ஸ்வில் நகரைச் சேர்ந்த 38 வயது கப்டன் சேத் ஆர். கோவல் (Capt. Seth R. Koval).
ஓஹியோவின் வில்மிங்டன் நகரைச் சேர்ந்த 30 வயது கப்டன் கர்டிஸ் ஜே. ஆங்ஸ்ட் (Capt. Curtis J. Angst).
ஓஹியோவின் கொலம்பஸ் நகரைச் சேர்ந்த 28 வயது சார்ஜென்ட் டைலர் எச். சிம்மன்ஸ் (Tech. Sgt. Tyler H. Simmons).

அமெரிக்க விமானப்படையின் KC-135 ஸ்ட்ரேட்டோடாங்கர் (Stratotanker) எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இவர்கள் பயணம் செய்தபோது, வியாழக்கிழமை மேற்கு ஈராக்கில் அது விபத்துக்குள்ளானது என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் “எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது தவறுதலான சொந்தப் படைத் தாக்குதலாலோ (friendly fire) நடக்கவில்லை” என்றும் இராணுவம் கூறியுள்ளது.
இந்த விபத்து குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக பென்டகன் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
