ஹோர்முஸ் நீரிணை விவகாரம் – சீனா உதவவேண்டும் என்கின்றார் டிரம்ப்

ஈரானுடனான மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய பெய்ஜிங் (சீனா) உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனத் தலைவர் ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டிருந்த உச்சிமாநாட்டை ஒத்திவைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

“சீனாவும் இதற்கு உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் சீனா தனது 90% எண்ணெயை இந்த நீரிணை வழியாகவே பெறுகிறது,” என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) நேர்காணலில் டிரம்ப் கூறினார். இந்த மாத இறுதியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பெய்ஜிங்கின் நிலப்பாட்டை அறிய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் அதை முன்னரே தெரிந்துகொள்ள விரும்புகிறோம். [இரண்டு வாரங்கள் என்பது] நீண்ட காலம்,” என்று கூறிய டிரம்ப், தனது சீனப் பயணம் குறித்துக் குறிப்பிடுகையில், “நாங்கள் அதைத் தள்ளிப்போடலாம்,” என்று தெரிவித்தார். இருப்பினும், இந்த தாமதம் எவ்வளவு காலம் இருக்கும் என்பதை அவர் விளக்கவில்லை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் முயற்சியில் சீனா இணையுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று கூறினார். ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் இருந்தவாறு, இந்த விவகாரம் குறித்து பெய்ஜிங்குடன் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் சீனா ஒரு சுவாரஸ்யமான ஆய்வுக்களம் (case study),” என்று பதிலளித்தார்.

“எனவே நான் ‘நீங்கள் உள்ளே வர விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன், என்ன நடக்கும் என்று பார்ப்போம்,” என்று கூறிய அவர், சீனாவின் முடிவில் சில பரந்த மூலோபாயக் காரணங்கள் (strategic considerations) செல்வாக்கு செலுத்தக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்தார். “ஒருவேளை அவர்கள் வரலாம், அல்லது வராமலும் போகலாம். அவர்கள் வராமல் இருப்பதற்கு வேறு சில ஆழமான காரணங்கள் இருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை கையாளும் இந்த முக்கியமான கடல் பகுதியை மீண்டும் திறக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒரு “கூட்டு முயற்சியில்” (team effort) இணைய வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்த மறுநாளே இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

மேலும், இந்த மாத இறுதியில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்க, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் சீன துணைப் பிரதமர் ஹே லிபெங் (He Lifeng) ஆகியோர் பாரிஸில் சந்தித்துப் பேசியுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை