ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு துபாய் விமான நிலையம் படிப்படியாகச் செயல்பாட்டிற்குத் திரும்புகிறது

துபாய் விமான நிலையத்திற்கு அருகில் திங்கள்கிழமை ஏற்பட்ட “ட்ரோன் தொடர்பான சம்பவத்தால்” (drone-related incident)  தீ விபத்து ஏற்பட்டது. வளைகுடா பகுதியில் ஈரான் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது விமானங்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நிறுத்தத்தைத் தொடர்ந்து, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) குறிப்பிட்ட இடங்களுக்கான விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றன,” என்று துபாய் விமான நிலைய நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கையில் உலகின் பிஸியான விமான நிலையமாகத் திகழும் இந்த இடத்திற்கு அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவம், ஒரு எரிபொருள் தொட்டியைப் பாதித்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. பின்னர் அந்தத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இதில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணியளவில் வி ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு, விமானத்திற்காகக் காத்திருந்த பயணிகள் பல மணிநேரம் தரைத்தளத்திற்கு (lower floor) மாற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலையத்திலிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்