அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ளதாக சீனா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
“ஈரான், ஜோர்தான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முடிவு செய்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான இடர்பாடுகளைக் குறைக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது
