ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தின் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை அதிகாலை வேளையில் (உள்ளூர் நேரப்படி) அங்கு வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக AFP மற்றும் ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புத் துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன. பல இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள, பலத்த பாதுகாப்புமிக்க ‘கிரீன் ஸோன்’ (Green Zone) பகுதிக்கு அருகில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்த நகரில் உள்ள AFP செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
