வாஷிங்டன்: ஈரானிய ஆட்சி தற்போதும் ‘உறுதியாக’ உள்ள போதிலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது ‘பெருமளவில் சிதைந்துள்ளதாக’ அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குழு விசாரணை: பிப்ரவரி இறுதியில் ஈரான் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற முதல் பகிரங்க உளவுத்துறை விளக்கக் கூட்டத்தில், சிஐஏ (CIA), எஃப்.பி.ஐ (FBI) உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் தலைவர்களுடன் துளசி கப்பார்ட் கலந்துகொண்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் அவர் கூறியதாவது:
-
இராணுவ நிலை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் ‘பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன’.
-
அச்சுறுத்தல் சர்ச்சை: ஈரான் ஒரு ‘உடனடி அச்சுறுத்தலா’ (Imminent threat) என செனட்டர் ஜான் ஓசாஃப் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க கப்பார்ட் மறுத்துவிட்டார். “எது அச்சுறுத்தல் என்பதை மட்டுமே ஜனாதிபதிதீர்மானிக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
-
ஹோர்முஸ் நீரிணை: முக்கிய வர்த்தகப் பாதையானஹோர்முஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்பதை உளவுத்துறை ஏற்கனவே கணித்திருந்தது என்றும், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை பென்டகன் எடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முரண்படும் கருத்துகள்: முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஜோ கென்ட், ஈரான் ஒரு உடனடி அச்சுறுத்தல் இல்லை எனக் கூறி இராஜினாமா செய்த நிலையில், சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe) அதனுடன் உடன்படவில்லை. ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக அவர் வாதிட்டார்.

அரசியல் சர்ச்சை: விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்ற தனது எழுத்துப்பூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கத் தவறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ” டிரம்பின் கூற்றுக்கு முரணாக இருக்கும் பகுதிகளை நீங்கள் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டீர்களா?” என செனட்டர் மார்க் வார்னர் கேள்வி எழுப்பினார். இதற்கு, அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகளைக் குறைத்ததாக கப்பார்ட் பதிலளித்தார்.
ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதற்காக ஜூன் 2025-இல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ’12 நாள் போரின்’ தொடர்ச்சியாக இந்த தற்போதைய மோதல்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது
