மார்ச் 21, 2026
கொழும்பு மற்றும் துபாய் இடையே இயக்கப்படும் UL231 மற்றும் UL232 ஆகிய விமான சேவைகளை, 2026 மார்ச் 21 முதல் 24 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
விமான விபரங்களைச் சரிபார்க்கவும்: பயணிகள் தங்கள் விமானப் பயணத்தின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை அறிய, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை அவ்வப்போது சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவிக்கு தொடர்பு கொள்ள: மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையம்: 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேச அளவில்).
தங்களுக்கு அருகிலுள்ள விமான நிறுவன அலுவலகம் அல்லது விமானப் பயணச்சீட்டு (Ticket) கொள்வனவு செய்த முகவர்.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், பயணிகளின் பொறுமை மற்றும் புரிதலுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.