அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை எந்தவித “அச்சுறுத்தலும் இன்றி” ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா “அழிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
டிரம்பின் முழுமையான பதிவு இதோ:
“இப்பொழுதிலிருந்து சரியாக 48 மணிநேரத்திற்குள், ஹோர்முஸ் நீரிணையை எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அமெரிக்க அவர்களின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்! இதில் மிகப்பெரிய மின் நிலையமே முதன்முதலில் தாக்கப்படும்!”