BBC
“சம்பந்தப்பட்ட தரப்பினர் விரும்பினால்”, அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் “எப்போதும் தயாராகவே உள்ளது” என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி (Tahir Andrabi) பிபிசியிடம் கூறுகையில், “பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தையே வலியுறுத்தி வருகிறது” என்றார்.
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஈரானிய அதிகாரிகள் பாகிஸ்தானில் சந்திக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து எந்தத் தரப்புடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ அந்த்ராபி மறுத்துவிட்டார்.
முன்னதாக வெள்ளை மாளிகை விடுத்த எச்சரிக்கையில், தற்போதைய சூழல் “மாற்றத்திற்கு உட்பட்டது” (fluid) என்றும், அமெரிக்கா மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே முறையான சந்திப்புகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசியது குறித்து இதுவரை பகிரங்கமான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
