ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக விடுவிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masato Kanda) தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பபட்டன.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அண்மைய பேரிடர் சூழ்நிலையைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.

பேரிடருக்குப் பிந்தைய நிலைமைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா பாராட்டினார். ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சூறாவளி அனர்த்தத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடனான வங்கியின் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டும் அதேவேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

மத்திய மலைநாட்டில் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்