ஈரான் இனி எப்போதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் – இந்த மோதலின் போது அவர் ஏற்கனவே பலமுறை இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
ஈரானில் அவரது குழுவினர் யாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறித்து விவரிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், “நாங்கள் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைமையையும் கொன்றுவிட்டோம், பின்னர் அவர்கள் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடினர், அவர்களையும் நாங்கள் கொன்றுவிட்டோம்,” என்றார்.
“இப்போது எங்களிடம் ஒரு புதிய குழு உள்ளது… அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று பார்ப்போம்.”
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஈரானில் “ஆட்சி மாற்றத்திற்கு” (Regime change) வழிவகுத்துள்ளன என்று கூறிய டிரம்ப், அதே வேளையில், “நான் யாரையும் நம்பவில்லை” என்றும் எச்சரித்துள்ளார்.
