போர் காரணமாக ஆசியாவின் பயன்படுத்தப்பட்ட கார் வர்த்தகம் சீர்குலைந்ததால் இலங்கையில் லம்போர்கினி கார்கள் தேங்கிக் கிடக்கின்றன.-ரொய்ட்டர்ஸ்

கடந்த மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கை நெருக்கடியில் தள்ளியதுடன், உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதைகளையும் சீர்குலைத்துள்ளன. இது ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட கார் வணிகம் செய்து வரும் உமர் அலி ஹைதர் அலிக்கு தொடர் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டு தசாப்தங்களாக ஜப்பானில் வசித்து வரும் ஹைதர் அலி,  ஜப்பானிலிருந்து தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயன்படுத்தப்பட்ட கார்களை ஏற்றுமதி செய்கிறார். ஜப்பானின் கடுமையான விதிமுறைகள் மற்றும் வழக்கமான ஆய்வுகள் காரணமாக, அங்குள்ள வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதால் இந்த நாடுகளில் அவற்றுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

யுத்தம் தொடங்கிய சில நாட்களிலேயே, 500-க்கும் மேற்பட்ட கார்களை ஏற்றிச் சென்ற தனது கப்பல் ஒன்று கடலில் சிக்கிக்கொண்ட செய்தியை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். துபாயிலிருந்து திருப்பி விடப்பட்ட சரக்குகளால் துறைமுகம் நிரம்பி வழிந்ததால், அந்த கப்பலால் இலங்கைக்குள் நுழைய முடியவில்லை.

“நாங்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பிய கார்கள் கடலில் முடங்கிக் கிடந்தன. இடமில்லாத காரணத்தால் உள்ளே நுழையக் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார். அந்த வாகனங்கள் இறுதியாக கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 10 நாட்கள் தாமதமாக இறக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நெருக்கடியும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்ட நிலையும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள சிறு கார் வணிகர்களை எவ்வாறு நிலைகுலையச் செய்துள்ளது என்பதற்கு ஹைதர் அலியின் துயரம் ஒரு சிறந்த உதாரணமாகும்.


துறைமுக நெரிசலால் ஏற்பட்ட ‘பீதி’

துறைமுக நெரிசல் ஜப்பானிய கப்பல் நிறுவனங்களிடையே ஒருவித “பீதியை” ஏற்படுத்தியுள்ளது. சில நிறுவனங்கள் ஏற்றுமதியை ரத்து செய்துள்ளன என்று ஹைதர் அலி கூறினார். மற்ற நிறுவனங்கள் சரக்குகளை பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு மாற்ற முன்மொழிந்தன. ஒரு நிறுவனம் ஒவ்வொரு காருக்கும் 5,000
டொலர் வைப்புபணம் கேட்டது. அவரது சில வாகனங்கள் மீண்டும் ஜப்பானுக்கே கொண்டு வரப்பட வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

யோகோஹாமாவைச் சேர்ந்த அவரது நிறுவனமான (Kobe Motor), ஆண்டுக்கு சுமார் 18,000 கார்களை ஏற்றுமதி செய்கிறது. முக்கியமாக அவரது சொந்த நாடான இலங்கைக்கு டொயோட்டா மற்றும் ஹோண்டா கார்களை அனுப்புகிறார். தற்போது, ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி மற்றும் பெராரி உள்ளிட்ட சுமார் 50 சொகுசு வாகனங்கள் இலங்கை மற்றும் சீனாவில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் கப்பல்களால் மத்திய கிழக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் துபாய்க்கு செல்ல முடியவில்லை.

விமான மூலம் அனுப்புவது ஒரு தேர்வாக இருந்தாலும், அதன் அதிகப்படியான செலவு மிகப் பெரிய பணக்காரர்களால் மட்டுமே சாத்தியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து 19 பில்லியன்
டொலர்  மதிப்பிலான பயன்படுத்தப்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளன. தென் கொரியா ஏற்றுமதி செய்த 883,000 கார்களில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய சந்தையாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளது.


தென் கொரியாவின் ஏற்றுமதி நிறுத்தம்

தென் கொரியாவில், மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலம் பயன்படுத்தப்பட்ட கார் வணிகத்தின் பரபரப்பான பருவமாகும். ஆனால் இந்த மோதல் காரணமாக ஏற்றுமதி முடங்கியுள்ளது.

இஞ்சியோன் (Incheon) துறைமுகத்தில் உள்ள வாகன சேமிப்பு வளாகத்தில், சுமார் 80% வாகனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டியவை. அங்கு தற்போது வணிகம் பெருமளவில் குறைந்துள்ளதாக கப்பல் நிறுவன அதிகாரி காங் டே-யாங் தெரிவித்தார். 70% வாகனங்கள் சேமிப்பு கிடங்குகளில் தேங்கியுள்ளன.

“யுத்தம் ஏற்படும் போதெல்லாம், எங்களால் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்று ஆட்டோமொபைல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜின் ஜே-வூங் கூறினார். ஹூண்டாய் அவான்டே மற்றும் கியா கே3 போன்ற மாடல்கள் மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானவை. தற்போது தேங்கியுள்ள கார்களை நிறுத்தி வைக்க மாதம் 40 மில்லியன் வோன் (Won) வாடகையாக செலுத்த வேண்டியிருப்பதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

சில ஏற்றுமதியாளர்கள் ஆப்பிரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்கா போன்ற மாற்று சந்தைகளைத் தேடுகிறார்கள். ஆனால், அந்த சந்தைகளில் தற்போது இவ்வளவு பெரிய தேவைகள் இல்லை என்பதால் அதுவும் கடினமாக உள்ளது.

கப்பல்கள் மும்பை அருகே முடங்கிக் கிடப்பதாலும், எரிபொருள் விலை உயர்வால் கப்பல் கட்டணம் அதிகரிப்பதாலும் இந்த வணிகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. “தற்போதைக்கு இதற்கு முறையான தீர்வு எதுவும் இல்லை,” என்று வணிகர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்