அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்துகிறதா? – அமெரிக்கத் தலைமைத்துவத்தை எள்ளி நகையாடும்ஈரான் இராணுவம் 

போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரானுடன் (Iran) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை கூறி வரும் நிலையில், அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று ஈரான்இராணுவம்  கருத்து தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சொல்ஃபகாரி (Ebrahim Zolfaqari), புதன்கிழமை அன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் அமெரிக்கத் தலைமைத்துவத்தை கடுமையாகச் சாடினார். “உங்கள் வாக்குறுதிகளின் காலம் முடிந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை மையமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் சொல்ஃபகாரி மேலும் கூறுகையில், “உங்கள் உள்நாட்டு மோதல்களின் அளவு, உங்களுக்குள்ளேயே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு எட்டிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

 டொனால்ட் ட்ரம்ப், ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் “தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் கூறினார். ஆனால் தெஹ்ரான் இதுவரை பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தவில்லை; இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே செய்திகள் பரிமாறப்பட்டதாகக் கூறியுள்ளது.

“நீங்கள் ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த மூலோபாய சக்தி (Strategic power), இப்போது மூலோபாய தோல்வியாக மாறியுள்ளது” என்று சொல்ஃபகாரி கூறினார். மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தை அமெரிக்கத் தலைவர்கள் தங்கள் மனதிலிருந்து “அழிக்கும்” வரை, எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ட்ரம்ப் எழுப்பியதையடுத்து, இந்த வாரம் எண்ணெய் விலைகள் சற்றே குறைந்திருந்தாலும், போர் தொடங்குவதற்கு முந்தைய விலையை விட அவை இன்னும் அதிகமாகவே உள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை