கொஞ்சே ஹபீபியாசாத் மூத்த நிருபர், பிபிசி பெர்சியன் (BBC Persian)
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi), அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த “சில நாட்களாக” அமெரிக்கா பல்வேறு மத்தியஸ்தர்கள் மூலம் “பலவிதமான செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் செய்திகள் “நட்பு நாடுகளின் வழியாகத் தெரிவிக்கப்படுவதும்”, அதற்கு ஈரானின் “நிலப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகளை” பதிலாக அளிப்பதும் ஒருபோதும் “கலந்துரையாடலோ அல்லது பேச்சுவார்த்தையோ அல்லது அது போன்ற வேறு எதுவுமோ அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு ஈரானின் கொள்கை என்பது தொடர்ந்து “தற்காத்துக் கொள்வது” மட்டுமே என்றும், அவர்களுக்கு “இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை” என்றும் அராக்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இது இஸ்ரேலின் போர்; இதற்கான விலையை இப்பிராந்திய மக்களும் அமெரிக்க மக்களுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
