2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (30) பிற்பகல் 2:00 மணிக்கு அறிவிக்கவுள்ளது.
: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) கடந்த பெப்ரவரி 13 அன்று முன்மொழிந்திருந்தது.
நிதிப் பற்றாக்குறை: தற்போதைய கட்டண முறையின் கீழ் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மொத்த செலவு 136.5 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் வருமானம் 116.9 பில்லியன் ரூபாய் மட்டுமே.
பொதுமக்கள் கருத்துக்கணிப்பு: நாடு தழுவிய ரீதியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் மேல் மாகாணத்தில் இறுதியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் முடிவுகளை ஆய்வு செய்த பின்னரே இந்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மின்சார சபையின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அனைத்து வகை நுகர்வோருக்கும் (Consumer categories) ஒரே சீரான முறையில் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
மின்சாரக் கட்டணம் உயருமா அல்லது குறைக்கப்படுமா என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகவுள்ளது
