மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் குடியிருப்புக்களை “சட்டபூர்வமான இலக்குகளாக” (Legitimate targets) கருதுவதாகவும், அவற்றின் மீது தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
: ஈரானின் முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஈரான் இராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி (Ebrahim Zolfaghari) தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கை: இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், “ஈரானில் உள்ள சிவிலியன் வீடுகள் மீது எதிரி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்திலுள்ள அமெரிக்க-இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் தளபதிகளின் வீடுகள் மீது குண்டுவீச்சைத் தொடங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலக்குகள்: அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசியல்வாதிகள், இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தங்குமிடங்கள் இனி ஈரானிய ஆயுதப் படைகளின் இலக்குகளாக இருக்கும் என வீடியோ அறிக்கை ஒன்றின் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
