துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன
.
குவைத் நாட்டின் கொடியுடன் பயணித்த ‘அல் சால்மி’ என்ற இந்த எண்ணெய் கப்பல் இரண்டு மில்லியன் பீப்பாய்எண்ணெயைச் சுமந்து கொண்டு சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பிடித்தது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கடலில் எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிபிசி வெரிஃபை இந்தப் படங்களில் காணப்படும் கப்பலின் சிறப்பம்சங்களை ‘அல்-சாமி’ கப்பலின் பழைய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது அதே கப்பல்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலின் வலது பக்கத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.