ஜெருசலேம்: ஈரான் மற்றும் அதன் நட்பு அமைப்புகள் இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரால் ஏவப்பட்ட ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் விழுந்து வெடித்ததில் இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய தாக்குதல் அலையைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வான்வழி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் மீது நடத்தி வரும் ‘எபிக் ஃபியூரி’ இராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.