எரிசக்தி விலை உயர்வால் உலகளாவிய உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு

பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்கள் விலை 2.4 வீதம் உயர்ந்துள்ளது. இதற்கு எரிசக்தி விலை உயர்வே முக்கிய காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயஅமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலையைக் கண்காணிக்கும் ‘FAO உணவு விலைக் குறியீடு’ (FAO Food Price Index), கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட உயர்வை விட இரண்டு மடங்கு அதிகமாக மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய மாதங்களில் உணவுப் பொருட்கள் விலை சரிந்து வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தானியங்கள், இறைச்சி, பால் பொருட்கள், தாவர எண்ணெய் மற்றும் சர்க்கரை என அந்த அமைப்பால் கண்காணிக்கப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக FAO கூறியுள்ளது. “தாவர எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தொடர்பான அழுத்தங்களே ஒட்டுமொத்த குறியீட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணம்,” என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சீனி விலையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் சர்க்கரை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்ற கவலையுமே முக்கியக் காரணங்களாக FAO சுட்டிக்காட்டியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு