இஸ்ரேல் முழுவதும் போர் எதிர்ப்புப் போராட்டங்கள்: 10 பேர் கைது
இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களின் போது சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
டெல் அவிவ் (Tel Aviv): போர் காலக் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான தடைகள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இங்கு ஒன்று கூடினர்.
-
ஹைபா (Haifa): சுமார் 200 பேர் பங்கேற்ற இந்தப் போராட்டம் ஹைபாவிலும், அதைத் தொடர்ந்து ஜெருசலேம் மற்றும் க்பார் சபா (Kfar Saba) ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.
-
முழக்கங்கள்: போராட்டக்காரர்கள் “நாங்கள் நிறுத்த வேண்டும்” (We must stop) மற்றும் “பிபி [பெஞ்சமின் நெதன்யாகு] நம் அனைவரையும் கொன்றுவிடுவார்” (Bibi will kill us all) போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
கைது நடவடிக்கை: தடை உத்தரவுகளை மீறியதற்காகவும், போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களுக்காகவும் சுமார் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.