NBC
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டு வார கால நேரடிப் பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ளதாக ஈரானின் அதியுயர் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்புகள்:
அதியுயர் தலைவரின் அங்கீகாரம்: ஈரானின் புதிய அதியுயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முஜ்தபா கமேனி இந்தப் பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகளுக்குத் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
10 அம்சத் திட்டம்: பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ள ஈரானின் 10 அம்சத் திட்டமே இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையாக அமையும். இந்தத் திட்டத்தின் அனைத்துக் கொள்கைகளையும் அமெரிக்கா ஏற்றால் மட்டுமே போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கால நீடிப்பு: ஆரம்பக்கட்டமாக இரண்டு வாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் இரு தரப்பும் சம்மதித்தால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம்.
ஈரானின் 10 அம்சத் திட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:
இராணுவ வெளியேற்றம்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ நிலைகள் மற்றும் தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்.
தடைகள் நீக்கம்: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணை: நீரிணை ஊடான போக்குவரத்தை ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்புடன் (ஊழழசனiயெவநன ஊழவெசழட) ஈரானின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
இழப்பீடு: போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
முடக்கப்பட்ட சொத்துக்கள்: வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் அனைத்துச் சொத்துக்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
ஐநா தீர்மானம்: இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளும் ஐநா பாதுகாப்புச் சபையின் பிணைப்புக்குரிய தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய நிலை:
“இது போரின் முடிவு அல்ல பேச்சுவார்த்தையின் தொடக்கமே” என ஈரான் எச்சரித்துள்ள போதிலும் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் இந்த 10 அம்சத் திட்டத்தை ஒரு “செயல்படுத்தக்கூடிய அடிப்படை” என வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
