லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்: தரைவழித் தாக்குதலுக்குப் பிந்தைய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் என அறிவிப்பு

லெபனானில் தனது தரைவழி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு இதுவரை இல்லாத அளவிலான “மிகப்பெரிய தாக்குதல்களை” முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ) அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து லெபனானின் பல்வேறு நகரங்கள் மற்றும் பட்டணங்களில் மிகக் கடுமையான குண்டுவீச்சுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மின்னல் வேகத் தாக்குதல்: ஒரே நேரத்தில் வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான சுமார் 100 தலைமையகங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிச்சே அத்ரே தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியின் அறிக்கை: இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஜெனரல் இயல் ஜமீர்  “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். எமது இந்தத் தாக்குதல்கள் நிறுத்தமின்றித் தொடரும்இ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நிலை: லெபனான் ஊடகங்களின்படி இந்தத் தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலாக நடத்தப்படுவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களில் பலர் உயிரிழப்பு- இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள மக்கள்

 

இஸ்ரேலிய விமானப்படை நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து லெபனான் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் திணறி வருவதுடன் இடிந்து விழுந்த கட்டிடங்களின் சிதைவுகளுக்கு அடியில் பலர் சிக்குண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

தாக்கப்பட்ட பகுதிகள்: பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் தெற்கு லெபனான் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பெக்கா பள்ளத்தாக்கு  ஆகிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் பின்னணி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனான் மோதலுக்கும் பொருந்தும் என இதனை மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால் அந்தத் தகவலை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்