பேச்சுவார்த்தைக்காக ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் வருகை: தூதுவர் தகவல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரானிய தூதுக்குழு ஒன்று வியாழக்கிழமை (இன்று) இரவு பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று பாகிஸ்தானுக்கான ஈரானிய தூதுவர் ரெசா அமிரி மொகடம் (Reza Amiri Moghadam) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “இராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேலிய ஆட்சியால் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் போர்நிறுத்த மீறல்களால் ஈரானிய பொதுமக்களிடையே சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும்,  பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று, ஈரானால் முன்மொழியப்பட்ட 10 அம்சங்களின் அடிப்படையில் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரானிய தூதுக்குழு இன்று இரவு (பாகிஸ்தான் தலைநகர்) இஸ்லாமாபாத் வந்தடையும்.”

இஸ்ரேல் “மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறுவதாக” அவர் குறிப்பிடுவது, லெபனானில் உள்ள ஈரானின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் குறிப்பதாகும். இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகரில் பலத்த பாதுகாப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, பாகிஸ்தான் அதிகாரிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நூற்றுக்கணக்கான கூடுதல் பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான இராஜதந்திர முயற்சியாகக் கருதப்படும் இந்தப் பேச்சுவார்த்தைகள், எதிர்பாராத மாற்றங்கள் ஏதும் நிகழாத பட்சத்தில் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளன.

வியாழக்கிழமை (இன்று), அதிகாரிகள் நகரின் முக்கியப் பகுதிகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, அதிபர் மற்றும் பிரதமரின் அலுவலகங்கள், வெளியுறவு அமைச்சு மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிதீவிர பாதுகாப்பு வளையமான ‘ரெட் ஸோன்’ (Red Zone) பகுதிக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் கொள்கலன்களை (shipping containers) வைத்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

தூதுக்குழுவினர் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி இடையேயான பயணம் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் இஸ்லாமாபாத் நகரம் இன்று வழக்கத்திற்கு மாறாக அமைதியாகக் காணப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஷியா அமைப்புகளால் நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை வெடித்தது. நாடு தழுவிய ரீதியில் அந்த ஆர்ப்பாட்டங்களில் 24-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து தீ வைக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். அந்த கசப்பான சம்பவங்களைத் தொடர்ந்தே தற்போது இந்த கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை