உமர் நங்கியானா மற்றும் சாரா ஹசன் | பிபிசி உருது, இஸ்லாமாபாத்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த உதவிய தனது பங்கை பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. இன்று அதன் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இரண்டு வார கால போர்நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்ததைத் தொடர்ந்து இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தலைநகரின் வீதிகளில் “ISLAMABAD TALKS” (இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை) என்று எழுதப்பட்ட டிஜிட்டல் விளம்பரப் பலகைகளைக் காண முடிகிறது. அவற்றில் அமெரிக்கா மற்றும் ஈரானின் கொடிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் இலச்சினை (Emblem) இடம்பெற்றுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது பங்கைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நாட்கள் பொது விடுமுறையையும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் உலகிற்கு மிகவும் முக்கியமானவை. போர் முடிவுக்கு வருவதையும், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவதையும் காண உலக நாடுகள் ஆவலாக உள்ளன. ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தவரை இதன் தாக்கம் மற்ற வழிகளிலும் மிக அதிகமாக உள்ளது.
“பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் ஆகிய நாடுகளிற்கு இடையிலான மோதலில் பாக்கிஸ்தான் வலிந்து உள்இழுக்கபபட்டால்பாகிஸ்தான் அதன் அண்டை நாடான ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது அந்த நாட்டிற்குகொடுங்கனவு போன்ற மோசமான சூழலை’ (Nightmare scenario) உருவாக்கும்,” என்கிறார் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிபுணர் அப்துல் பாசித்.
இருப்பினும், பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பெருமிதமும் உற்சாகமும் நிறைந்து காணப்படுகின்றன, இது தொடர்பான பல்வேறு ‘மீம்ஸ்கள்’ (Memes) வைரலாகி வருகின்றன.
“உலகில் வேறு எந்த நாடும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், நாம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் இருந்தோம். பாகிஸ்தான் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அந்த வகையில் இது ஒரு வெற்றி தான்,” என்கிறார் பாசித்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் கொந்தளிப்பு, பலவீனமான பொருளாதாரம் மற்றும் இந்தியாவுடனான கடும் பகை ஆகியவற்றை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த வெற்றி மிகவும் தேவையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
