அமெரிக்கா – ஈரான் – பாகிஸ்தான் இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை 15 மணித்தியாலங்களைக் கடந்து நீடிப்பு

அமெரிக்கா – ஈரான் – பாகிஸ்தான் இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை 15 மணித்தியாலங்களைக் கடந்து நீடிப்பு

துணை ஜனாதிபதிவான்ஸ் தலைமையில் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்க, ஈரானிய மற்றும் பாகிஸ்தானிய தூதுக்குழுக்களுக்கு இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி வரையிலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் அறிந்துள்ளது.

இந்த முத்தரப்பு நேருக்கு நேர் சந்திப்பில், அமெரிக்க தரப்பில் ஜே.டி. வேன்ஸ்,  டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மற்றும் பாகிஸ்தானிய உயர் அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் காலவரிசை:

  • சனிக்கிழமை மதியம் 12:00 மணி: ஜே.டி. வான்ஸின் வாகனத்தொடரணி பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தது.

  • சனிக்கிழமை மதியம் 2:00 மணி: வான்ஸ் மற்றும் பாகிஸ்தானிய தூதுக்குழுவினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது.

  • சனிக்கிழமை மாலை 5:00 மணி: ஈரானிய அதிகாரிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

  • ஞாயிறு அதிகாலை 5:00 மணி: பல இடைவேளைகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மியாமி (Miami) செல்வதற்காக வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட  டொனால்ட் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, “எனக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. நீங்களும் கவனித்திருப்பீர்கள், அவர்கள் பல மணிநேரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று பதிலளித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்