ஹோர்முஸ்நீரிணைக்குள் கப்பல்கள் நுழைவதையும் அங்கிருந்து வெளியேறுவதையும் அமெரிக்க கடற்படை தடுக்கும்- ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ்நீரிணைக்குள் (Strait of Hormuz) நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் “எல்லா கப்பல்களையும்
முற்றுகையிடும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 ட்ரம்ப்பின் அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • பேச்சுவார்த்தை குறித்து: தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பேச்சுவார்த்தைகள் நன்றாகவே நடந்தன, பெரும்பாலான விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், உண்மையில் முக்கியமான ஒரே விடயமான ‘அணு ஆயுதம்’ (NUCLEAR) என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • கப்பல் போக்குவரத்து: தடையற்ற போக்குவரத்து குறித்த உடன்பாடு ஒரு கட்டத்தில் எட்டப்படும் என்று கூறிய அவர், “யாரும் அறியாத, தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஓரிடத்தில் கடற்கண்ணிவெடிகள் இருக்கலாம் என்று ஈரான் கூறுவதன் மூலம், அந்த உடன்பாடு ஏற்படுவதை அவர்கள் தடுத்துவிட்டனர்” என்றார்.

  • முக்கிய உத்தரவு: ஈரானுக்கு சுங்கக் கட்டணம் (Toll) செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் தேடித் தடுத்து நிறுத்தத் தனது கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் வைத்துள்ள  கண்ணிவெடிகளைஅமெரிக்க கடற்படை அழிக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

  • எச்சரிக்கை: “சட்டவிரோதமான சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும் எவருக்கும் சர்வதேசக் கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “அமெரிக்கா மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் ஈரானியர்கள் எவரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் (BLOWN TO HELL)” என எச்சரித்துள்ளார்.

“இந்த முற்றுகை விரைவில் தொடங்கும்,” என்று ர் ட்ரம்ப் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு ஈரானுடனான மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்