ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்குகிறது

ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை (Naval blockade) தொடங்குவதற்கு, டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த காலக்கெடு இதுவாகும்.

அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (Centcom) மாலுமிகளுக்கு அனுப்பிய மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பின்படி, இந்த முற்றுகை “ஈரானிய கடற்கரை முழுவதையும்” உள்ளடக்கியதாக இருக்கும். ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலில்,ஹோர்முஸ்நீரிணைக்கு (Strait of Hormuz) கிழக்கே பயணம் செய்யும் அனைத்து நாட்டு கொடிகளை ஏந்திய கப்பல்களையும் இது பாதிக்கும்.

சென்காம் (Centcom) விடுத்துள்ள எச்சரிக்கையில், “அனுமதியின்றி முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்கள் மறிக்கப்படவோ, திசைதிருப்பப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் போன்ற மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், உரிய சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படும் என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், இந்த ஹோர்முஸ்நீரிணையை நெருங்கும்  போர்க்கப்பல்கள் “மிகக் கடுமையாக கையாளப்படும்” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) தெரிவித்துள்ளது.

 

ஓமன் வளைகுடா அருகே அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் இரண்டு அழிப்புக் கப்பல்கள் தென்பட்டன

ஈரான் தொடர்புடைய கப்பல்கள் மீதான முற்றுகை இன்று 14:00 GMT மணிக்கு அமலுக்கு வரும் என்று  டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் எந்தெந்த அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் உள்ளன என்பதை அறிய பிபிசி வெரிஃபை (BBC Verify) செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து வருகிறது.

சனிக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவின் கிழக்கு விளிம்பில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இது ஈரானிய கடற்கரையிலிருந்து தெற்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ளது.

யுத்தம் தொடங்கியதில் இருந்து, அணுசக்தியால் இயங்கும் இந்த போர்க்கப்பல் வளைகுடா பகுதிக்கு மிக அருகில் அவதானிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அந்தப் படங்களில் காணப்படும் மற்ற இரண்டு போர்க்கப்பல்கள், அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பல்களின் (Guided-missile destroyers) அளவு மற்றும் வடிவத்துடன் ஒத்துப்போகின்றன.

அவை ‘ஆபிரகாம் லிங்கன்’ கப்பலின் தாக்குதல் குழுவின் (Carrier strike group) ஒரு பகுதியாக இருக்கக்கூடும், ஆனால் அவை துல்லியமாக எந்தக் கப்பல்கள் என்பதை எங்களால் அடையாளம் காண முடியவில்லை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல