CBS
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ்நீரிணை ஜலசந்தி மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை இன்று காலை 10 மணியளவில்இ அமெரிக்க கடற்படை கப்பல்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனவா என்பது குறித்து உடனடித் தகவல்கள் ஏதும் இல்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் “ஈரானுக்குக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள அனைத்துக் கப்பல்களையும் தேடி மறிக்குமாறு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றும் ” ஈரானியர்கள் விரித்துள்ள கண்ணிவெடிகளை (ஆiநௌ) அமெரிக்கா அழிக்கத் தொடங்கும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் “எங்கள் மீதோ அல்லது அமைதியான முறையில் செல்லும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானியரும் மிகக் கடுமையாக அழிக்கப்படுவார்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த அச்சுறுத்தல் ஈரான் மற்றும் பிற உலகத் தலைவர்களிடமிருந்து உடனடி கண்டனங்களைத் தூண்டியுள்ளது. ஈரானிய செய்தி நிறுவனங்களின்படி ஹோர்முஸ்நீரிணை இன்னும் ஈரானின் “முழு கட்டுப்பாட்டில்” இருப்பதாகவும் இராணுவமற்ற கப்பல்களுக்கு அது திறந்திருப்பதாகவும் ஆனால் இராணுவக் கப்பல்கள் நுழைந்தால் “மிகப் பலமான பதிலடி” கொடுக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த நீண்ட நேரப் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கை எட்டப்படாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.