ஷம்மி சில்வா ‘போல்ட் அவுட்’: இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன?

இலங்கையில் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்) நீண்டகாலத் தலைவராக இருந்த ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஷம்மி சில்வாவுக்குப் பதிலாக முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவின் ஊடாக நியமிக்கப்பட உள்ளதாக ‘டெய்லி மிரர்’ தெரிவித்துள்ளது.

வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக வாக்கு வேட்டை மற்றும் அரசியல் ஆதரவுடன் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டதாக ஷம்மி சில்வா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் ஐ.சி.சி அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைம் ஒரு தனியார் நிறுவனம் என்றும் அதன் நிதி விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் ஷம்மி சில்வா வாதிட்டு வந்தார். இது விமர்சகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஷம்மி சில்வாவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் தனது பதவியையே இழக்க வேண்டியிருந்தது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தணிக்கையாளர் நாயகம் சமர்ப்பித்த நான்கு விசாரணை அறிக்கைகள் அத்துடன் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தயாரித்த அமைச்சரவை உபகுழு அறிக்கை ஆகியவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்திருந்தன.

நிதி முறைகேடுகள் உறவினர்களுக்குச் சலுகை வழங்குதல் மற்றும் சர்வாதிகாரப் போக்கு போன்ற குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில் தற்போது ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். தனது பதவியை விட்டு வெளியேறிய பிறகு ஷம்மி சில்வா பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட விவகாரங்களை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பொதுமக்களையும் ஊடகங்களையும் எதிர்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு