2.5 மில்லியன் டொலர் திறைசேரி நிதி ஹேக்கர் வசம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தவறான அறிவுறுத்தல்கள் மூலம் ஹேக்கர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

: கதிர்காமத்தில் இன்று ஊடகங்களிடம் பேசிய அவர்இ வெளிநாட்டுக் கடன் தவணை ஒன்றைச் செலுத்த முற்பட்ட போதே இந்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிர்வாகத் தோல்வி: நிதி அமைச்சுஇ திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு நாட்டின் நிதி நடவடிக்கைகளை முறையாக நிர்வகிக்கும் திறன் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக அவர் சாடினார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: போலி உறுதிப்படுத்தல்கள் மற்றும் மோசடியான அறிவுறுத்தல்கள் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இழக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முறையான சரிபார்ப்பு நடைமுறைகள் இன்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு கைமாறியது? அரச கடன் மேலாண்மை அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? போன்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நிதி மோசடிக்குக் காரணமானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச  வலியுறுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை