ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் (DRP) உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி நடைபெறும் விதம்:

போலி தொலைபேசி அழைப்புகள்: திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலக்கத்தை ஒத்த +94115226126, +0115226126 ஆகிய இலக்கங்களிலிருந்தும், 0771167739, 0742756098 ஆகிய கைபேசி இலக்கங்களிலிருந்தும் பொதுமக்களுக்கு அழைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

போலி செயலி (Mobile App): டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-தேசிய அடையாள அட்டை (e-NIC) பதிவு செய்வதாகக் கூறி, அரச இலச்சினையைப் பயன்படுத்திய போலி செயலி ஒன்றை மோசடிக்காரர்கள் உருவாக்கியுள்ளனர்.

போலி இணையதளம்: திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் https://drpgov-lk[.]com என்ற போலி இணையதளம் ஊடாகத் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

திணைக்களத்தின் விளக்கம்:

இவ்வாறான மின்னணு முறையிலான பதிவுகளைத் திணைக்களம் தற்போது முன்னெடுக்கவில்லை.

திணைக்கள அதிகாரிகள் ஒருபோதும் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தனிப்பட்ட தகவல்களைக் கோருவதில்லை.

சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது இணையதளங்களுக்கு உங்களது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்