கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ
நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’ (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் கண் சத்திர சிகிச்சைப் பிரிவில் வட மாகாணம் இன்று புதியதொரு பரிணாமத்தை எட்டியுள்ளது. இலங்கையிலேயே வட மாகாணத்தில் மட்டும்தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. எமது மாகாணத்தின் இந்தச் சிறந்த சேவையினால் கவரப்பட்டு, ஏனைய மாகாணங்களில் இருந்துகூட மக்கள் இங்கு வந்து சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு செல்கின்றனர். இது எமது மாகாணத்துக்குக் கிடைத்த கௌரவமாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 கிராமங்கள் இச்செயற்றிட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த சுகாதாரத் துறையினரின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.எமது மக்களுக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்’ என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் செயற்பட வேண்டும். எமது இந்த முன்னோடி முயற்சிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது என்றும் வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களின் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் எம்.மலரவன் இதன்போது திட்டத்தின் நோக்கம் மற்றும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சி.சேரலாதன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்