”SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சமூகம் ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிடல் சமூக உருவாக்கம் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 27.03.2026 அன்று வவுனியா மாவட்டத்தின் இளைஞர்களுக்கான பயிற்சி செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது. இச்செயலமர்வில் பங்கேற்ற இளைஞர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு பல பயனுள்ள விடயங்களை அறிந்து கொண்டனர்.
இப்பயிற்சிகளில் வளவாளர்களாக SOND நிறுவனத்தின் சமூக ஊடக மேலாளர் டெஸ்மண்ட், செல்வி டினோஜா ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்


