தக்காளிச்செய்கை” மூன்றாவது பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை

கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம், நவீன விவசாய முறையில் மூன்றாவது முறையாகவும் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
அலுவலக சூழலை பசுமையாக மாற்றுவது, ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்டு, ஊழியர் நலன்புரிச் சங்கம் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஆரம்ப முயற்சியின் வெற்றியினை தொடர்ந்து மூன்றாவது தடவை மேற்கொள்ளப்பட்ட தக்காளிச் செய்கையின் முதலாவது அறுவடை மேற்கொள்ளப்பட்டது.
இவ் அறுவடை செயற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஊழியர் நலன்புரிச்சங்கத்தினர்,உத்தியோகத்தர்கள் இணைந்து ஈடுபட்டனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் UNDP நிறுவனத்தின் City Project நிதி பங்களிப்பில், பச்சை வீட்டமைப்பின் கீழ் பிளாட்டினம் வகை தக்காளிச்செடிகள் நவீன விவசாய முறையில் பயிரிடப்பட்டன. இந்த முயற்சி அதிக விளைச்சலை ஊழியர் நலன்புரிச்சங்கத்திற்கு பெற்றுக்கொடுத்திருந்தது.
பல்வகை பயிரிடல் மூலம் விளைச்சல் நிலைத்தன்மையை அதிகரிப்பதும், நவீன விவசாயத்தை ஊக்குவிப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் இந்த முயற்சியினை நவீன விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள்,
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,
பசுமை வீட்டு விவசாயத்தை முயற்சிக்க விரும்பும் இளைஞர்கள் நேரில் வருகைதந்து பார்வையிடுவதோடு
பச்சை வீட்டு விவசாயம் தொடர்பான தொழில்நுட்பம், செலவீன-வருமான கணக்கீடு, பராமரிப்பு முறைகள், கலப்பு பயிரிடல் செயல்முறைகள் குறித்து நேரில் கற்றுக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் நேரங்களில் மாவட்டச் செயலக அலுவலக தோட்டத்திற்குச் சென்று பார்வையிடலாம்.
வார நாட்களில்: காலை 9.00 – பிற்பகல் 4.00 மணி
இடம்: கிளிநொச்சி மாவட்டச் செயலக அலுவலக தோட்டம்
கலந்துரையாடல்: தொழில்நுட்ப குழு / பராமரிப்பு குழு.
இந்த முயற்சி, மாவட்ட விவசாயிகளுக்கான திறன் வளர்ச்சிக்கும் நவீன விவசாய முறைகளின் பரவலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை