இலங்கையில் சர்வதேச (Contactless) கொடுப்பனவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் கூகுள் பே (Google Pay) வசதியை அறிமுகப்படுத்தியது சம்பத் வங்கி

சம்பத் வங்கி (Sampath Bank PLC) தனது அனைத்து மாஸ்டர்கார்ட் (Mastercard) மற்றும் விசா (Visa) கடன் மற்றும் பற்று அட்டைதாரர்களுக்கு (Credit and Debit Cardholders) கூகுள் பே (Google Pay) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளைப் பயன்படுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்தத் திட்டமானது, மொபைல் வழித் தீர்வுகளுக்கு (mobile-first solutions) அதிகரித்து வரும் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ‘டெப்-டு-பே’ (tap-to-pay) தொடுகையற்ற கொடுப்பனவு வசதியைக் கொண்டுவருகிறது.

மொபைல் வாலெட்டுகள் (Mobile wallets) நுகர்வோர் தங்களது நிதியைக் கையாளும் முறையை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன; குறிப்பாக வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவுள்ள பயனர்கள் மற்றும் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம், அட்டைதாரர்கள் தங்களது விசா மற்றும் மாஸ்டர்கார்ட் கடன் மற்றும் பற்று அட்டைகளை டிஜிட்டல் மயமாக்கிக் கொள்வதுடன், கடைகள் (in-store), செயலிகள் (in-app) மற்றும் இணையவழி (online) தளங்கள் ஊடாகத் தடையின்றிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இத்தீர்வு, வாடிக்கையாளர்கள் தங்களது கைகளில் நேரடி அட்டைகளை (physical cards) வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குவதுடன், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வர்த்தக நிலையங்களில் தடையின்றிப் பணம் செலுத்தவும் வழிவகுக்கிறது. மேலும், இது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் போக்குகளுக்கு ஏற்ப, இலங்கையில் பாதுகாப்பான, தொடுகையற்ற கொடுப்பனவு சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய தொடர்ச்சியான மாற்றத்திற்குப் பக்கபலமாக அமைகிறது.

இந்த அறிமுகம் குறித்து சம்பத் வங்கியின் தலைமை வணிக நுண்ணறிவு அதிகாரி (Chief Business Intelligence Officer) தர்ஷின் பதினாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் தத்தெடுப்பு என்பது இன்று நிதிச் சேவைகள் அன்றாட நடைமுறைகளுடன் எவ்வளவு இயல்பாக ஒருங்கிணைந்துள்ளன என்பதைப் பொறுத்தே அமைகிறது. வாடிக்கையாளர்கள் கூடுதல் சிக்கல்கள் ஏதுமின்றி பாதுகாப்பான, உடனடி பதிலளிக்கக்கூடிய மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த அனுபவங்களை எதிர்பார்க்கிறார்கள். கூகுள் பே (Google Pay) வசதியானது சம்பத் வங்கி அட்டைதாரர்கள் தங்களது நிதி நிலவரங்களுடன் தடையின்றி இணைந்திருக்கும் அதேவேளையில், முழுமையான நம்பிக்கையுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் வங்கியியல் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடாக இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு இயல்பான நீட்சியாக மாறுகிறது” என்றார்.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் மேம்பட்ட ‘டோக்கனைசேஷன்’ (tokenization) தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் அட்டையின் ரகசிய விபரங்களுக்குப் பதிலாகப் பாதுகாப்பான டிஜிட்டல் அடையாளங்காட்டிகளைப் (digital identifiers) பயன்படுத்துகிறது. இது வேகமான மற்றும் தடையற்ற கொடுப்பனவு அனுபவத்தை வழங்கும் அதேவேளையில், வாடிக்கையாளரின் தரவுகள் அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. சம்பத் வங்கியின் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் ஆதரவுடனும், கூகுளின் உலகளாவிய கொடுப்பனவு அமைப்பின் ஒருங்கிணைப்புடனும், இத்தீர்வு உள்ளூர் மற்றும் சர்வதேசக் கொடுப்பனவுச் சூழல்கள் இரண்டிலும் நம்பகத்தன்மையையும் சிறந்த அளவீட்டுத் திறனையும் (scalability) வழங்குகிறது.

சம்பத் வங்கியின் அட்டை மையத் தலைவர் (Head of Card Centre) சிரத் சமரசேகர மேலும் விவரிக்கையில், “அட்டைகளின் பயன்பாடு என்பது சாதாரண அட்டை வடிவங்களைத் தாண்டி, மிகவும் நெகிழ்வான டிஜிட்டல் கொடுப்பனவுச் சூழலாக உருவெடுத்து வருகிறது. பல வழிகள் மற்றும் வெவ்வேறு நாடுகளுக்கு அப்பால் சீரான கொடுப்பனவு அனுபவத்தை வழங்குவதன் மூலம், கூகுள் பே வசதியானது சம்பத் கார்டுகளின் (SampathCards) அன்றாடப் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. எமது அட்டைதாரர்கள் இப்போது உள்ளூரில் ‘டெப்-டு-பே’ வசதியைப் பெற முடியும் என்பதுடன், பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளையும், உலகளவில் எந்தவொரு தடங்கலுமின்றிப் பரிவர்த்தனை செய்யும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். இந்த ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்துவதுடன், தொடுகையற்ற மற்றும் மொபைல் வழி கொடுப்பனவுகளுக்கான வளர்ந்து வரும் விருப்பங்களுடன் ஒத்துப்போகிறது, இது டிஜிட்டல் சேனல்கள் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

நவீன நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான, வசதியான மற்றும் சர்வதேச ரீதியில் இணைக்கப்பட்ட கொடுப்பனவு தீர்வுகளை வழங்குவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், சம்பத் மாஸ்டர்கார்ட் மற்றும் விசா கடன் மற்றும் பற்று அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு சாதனங்களில் தற்போது கூகுள் பே வசதி கிடைக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது