Jehan Wijesinghe
நீங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரா (Entrepreneur) அல்லது சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகக் கட்டமைப்பை (SME) நடத்துபவரா? உங்களது வணிகத்தை அமெரிக்க (U.S.) சந்தைக்கு விரிவுபடுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
சர்வதேச விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் (International buyers), உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை மதிப்பிடும் போது நாம் சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்காத பல காரணிகளைக் கருத்தில் கொள்கின்றனர். இதனால் முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பாகவே பல வணிக ஒப்பந்தங்கள் கைநழுவிப் போய்விடுகின்றன.

அத்தகைய முக்கிய காரணிகள் என்னென்ன என்பதையும், அமெரிக்கக் கொள்வனவாளர்கள் மற்றும் கூட்டாளர்களால் உங்களது வணிகம் நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் உங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதையும் இந்தச் செயலமர்வில் அறிந்துகொள்ளுங்கள்.
அமெரிக்கச் சந்தையில் கொள்வனவாளர்களுடனான உங்களது நம்பகத்தன்மையை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் அதிக வணிக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பதற்குக் கூட்டாண்மைக்குத் தயாராவது (partnership-ready) எப்படி என்பது குறித்து உங்களுக்கு வழிகாட்ட, துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இந்த 3 மணித்தியால விசேட செயலமர்வில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.
-
திகதி: ஜூலை 12, 2026
-
நேரம்: முற்பகல் 09:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை
-
இடம்: அமெரிக்கன் கோணர் (American Corner), யாழ்ப்பாணம்
