தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் இணையவழியில்

தேசிய பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான (Annual and Compulsory Teacher Transfer Programme) விண்ணப்பங்களை இணையவழியாகச் சமர்ப்பிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில், தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்திற்கான (NSTT) http://nstt.moe.gov.lk l) ஊடாக 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இணையவழியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதன் அச்சிடப்பட்ட பிரதியை (Printed copy) பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பிரதியைத் தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த இடமாற்ற செயல்முறையின் ஒரு பகுதியாக, அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பாடசாலை அதிகாரிகளின் ஊடாகவே மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. எனவே, தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் இணையவழி முறையை மட்டுமே பயன்படுத்துமாறும், குறிப்பிடப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சின் இடமாற்றக் கொள்கைக்கு இணங்க, தேசிய பாடசாலைகளுக்கு இடையே ஆசிரியர்களின் இடமாற்றங்களை இலகுபடுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றத் திட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து