ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு இணக்கமானவை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் இன்று (21) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் போது பதில் சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்த திருத்தங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்குவதற்கு உட்பட்டதாகவே இத்தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை அவசியமில்லை என்பதுடன், சாதாரண பெரும்பான்மை போதுமானதாகும்.