டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன சேவை வழங்கல்: வடமாகாண சபைக்கு ஊவா மாகாண சிரேஷ்ட அதிகாரிகள் குழு விஜயம்!**

வடமாகாண சபையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் மற்றும் நவீன சேவை வழங்கல் முறைகளை நேரில் ஆராய்ந்து, அவற்றை ஊவா மாகாணத்திலும் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஊவா மாகாண சபையின் சிரேஷ்ட தர உத்தியோகத்தர்கள் குழுவினர்  வடமாகாண சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

May be an image of one or more people, people studying and text

 

ஊவா மாகாண சபையின் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உட்பட 25 சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் அடங்கிய குழுவினரே இவ்வாறு வடமாகாண சபைக்கு வருகை தந்திருந்தனர்.
வடமாகாண பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் இரு மாகாண அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், வடமாகாண சபை அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் குறித்தும், கிடைக்கக்கூடிய வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி நிறுவன ரீதியாக அடைந்துள்ள இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்தும் விரிவான விளக்கக்காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சபை சார்பில் பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மாகாணங்களுக்கு இடையிலான இந்த பரஸ்பர அறிவுப் பகிர்வானது, நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இரு மாகாணங்களினதும் பொதுச் சேவைத் திறனை மேலும் வலுப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவதற்கும் பெரிதும் உதவும் என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து