ஜப்பானின் ‘நிகோன் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ்’ (Nippon Paper Industries) நிறுவனத்தின் யட்சுஷிரோ ஆலையில் (Yatsushiro Plant) புகைபோக்கி (Chimney) சரிந்து விழுந்ததில், பலரைக் காணவில்லை என்று காவல்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆலை குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள யட்சுஷிரோ நகரில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திற்குப் கிடைத்துள்ள அப்பகுதியின் வான்வழிப் புகைப்படம் (Aerial photograph), உடைந்து சரிந்து விழுந்த புகைபோக்கியைக் காட்டுகிறது.